Wednesday, 21 January 2009

விடுதலையான தமிழின உணர்வாளர்களுக்கு மகத்தான வரவேற்பு


"விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதில் தவறில்லை" : சீமான்
திகதி: 21.01.2009 // தமிழீழம் // [சோழன்]
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி , இயக்குநர் சீமான்மற்றும் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன்ஆகியோரை நிபந்தனையில்ல பிணையில் விடுதலை செய்யக்கோரி நேற்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தனர்.அவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக கோவைகு.இராமகிருட்டிணன் மற்றும் தலைமைக்கழக உறுப்பினர் வெ.ஆறுச்சாமிதலைமையில் சிறை வாயிலில் கூடி இருந்தனர்.

தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.பின்னர் பெரியார் திராவிடர்கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்குநிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள்.

வரவேற்பு ஏற்பாட்டினை தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் உணர்வாளர்களும்கலந்து கொண்டு மூவரையும் வரவேற்றனர்.

விடுதலையான் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘தமிழர்களுக்காக போராடும் தமிழ் இயக்கம் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை.நான் தொடர்ந்து விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவேன்.தமிழ் ஆதரவாளர்களை இணைத்து விரைவில் ஈழப்பிரச்சனை தொடர்பாக மாபெரும் போராட்டம் நடத்துவேன்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment