Wednesday 5 August 2009

குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்: இயக்குநர் சீமான்

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய இயக்குநர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதாக, கூட்டத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசினார்.

’’புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். பிரபாகரன் என் அண்ணன் என்று கூறினேன். என்னை கைது செய்யும் போது புதுச்சேரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் கிடையாது. அதன் பின்னர்தான் அதைக் கொண்டு வந்தனர்.

எல்லோரும் பிறர் தங்களை தலைவர் என்று அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தந்தை பெரியார்தான் உண்மையான தலைவர்.

தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்த பிரபாகரன்தான் உண்மையான தளபதி. என் குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த பிரபாகரன்தான் உண்மையான தலைவன்.

சிங்கள இன வெறியர்களை எதிர்த்துப் போராடிய தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தியவர் தலைவர் பிரபாகரன்’’ என்று பேசினார்.

Wednesday 18 February 2009

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு


இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.


இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.


இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.


’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.



திருச்செந்தூர் வந்த மத்திய மந்திரி லல்லு பிரசாத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கினார்கள். அந்த ஆட்டுக்குட்டி தாயை பிரிந்து பால் குடிக்காமல் தவிப்பதை பார்த்து அதிகாரிகள் ஓடோடி வந்து ஆட்டுக்குட்டியின் தாயை பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.


என்ன கரிசனம்..ஆட்டுக்குட்டி மீதுள்ள பாசம் கூட தமிழர்கள் மீது இல்லையே? அங்கே என் உறவுகள் சாவுகிறார்கள். தாயையும் தந்தையையும் பிரிந்து அனாதையாக அழுகிறார்கள். ஆட்டுக்குட்டியை ஒன்று சேர்த்தவர்கள் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கவில்லையே.


அங்கே இருக்கும் உறவுகள் நம்மை நம்பி இருக்கிறார்கள். பிரபாகரன் நம் உயிரை கேட்கவில்லை. உணர்வை கேட்கிறார்.நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேனாம். எங்கே இருக்கிறது இறையாண்மை?


பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாரானார்கள். நமது கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக்கொன்றார்கள். அப்போது யாருமே தட்டிக்கேட்க வில்லையே.


பாகிஸ்தானுடன் என்றால் கிரிக்கெட் விளையாடமாட்டார்கள். இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எங்கே இருக்கிறது இறையாண்மை.


ஜப்பான், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடன் கொடுக்கிறது.அதை கொடுக்காதே என்று கர்நாடகாக்காரன் ஜப்பானுக்கு கடிதம் எழுதுகிறான். முல்லை பெரியாறு' காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.


தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றி பேசக்கூடாது என்றால் பிரபாகரனை எதிர்த்தும் பேசக்கூடாது. எதிர்த்து பேசுகிறவர்களை விட்டு விடுகிறார்கள். பிரபாகரன் பேட்டி கொடுத்தால் இந்தியா முழுவதும் செய்தி வருகிறது. அவரைப் பற்றி பேசினால் தடையா? இந்த தடையை உடைக்க வேண்டும்.


சினிமா படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனின் உறவுகளை எதிரிகள் கொலை செய்வார்கள். கதாநாயகன் அதை கண்டு பிடித்து பழி வாங்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஒரு கற்பனை கதாபாத்திரம் செய்தால் பாராட்டும் நாம் அதை நிஜத்தில் செயல்படுத்துபவர்கள் தீவிரவாதிகளா?


இந்திரா காந்தியின் கனவு, எம்.ஜி.ஆரின் கனவு, தமிழ் ஈழம். அங்கே தமிழ் தாய்மார்களின் கருவை கலைக்கிறார்கள். உலகத்திற்கு உண்மைகளை கொண்டு செல்ல நான் பேசுகிறேன்.


நீங்கள் உணர்வை வாக்கு பதிவில் காட்டுங்கள். 40 தொகுதியில் வெற்றியை கொடுத்தோம். இனி 40 தொகுதியிலும் வீழ்த்துவோம். எந்த நாட்டிலும் சொந்த மக்களே அகதிகளாக இருந்ததில்லை. இலங்கையில் மட்டும் தான் இந்த அவலம்.


அங்கு தஞ்சம் புகுந்தவர்களை சிங்கள ராணுவம் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் கம்பி சிறைக்குள் அடைத்து பட்டினி போடுகிறது.


ஒரு இனம் செத்து மடிகிறது. எல்லாரும் அழுகிறார்கள். நான் கதறி அழுகிறேன். இதில் பிழை இல்லை. போரை நிறுத்தச் சொல்வது மனித உரிமை. போப் ஆண்டவர் போரை நிறுத்தச் சொல்கிறார்.


ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று பேசுபவர்கள், ராஜீவ்காந்தியின் பின் மண்டையை தாக்கிய சிங்கள ராணுவ வீரனை என்றாவது கண்டித்து பேசியது உண்டா?


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள், மாணவர்கள், மக்கள், திருநங்கைகள் என்று அனைத்துதரப்பினரும் போராட்டம் நடத்தி விட்டார்கள். இந்த மக்களை மதித்து ராணுவ உதவிகளை நிறுத்துங்கள். நமது ராணுவ வீரர்களை திருப்பி அழையுங்கள்.


மூன்று நாளில் பிரபாகரன் ஒட்டு மொத்த இலங்கையையே கைப்பற்றி விடுவார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வேறு, விடுதலை புலிகள் வேறு அல்ல.


எல்லா நாட்டிலும் விடுதலையை அங்கீகரிக்கிறது ஐ.நா. சபை. -ஆனால் ஈழத்தமிழ் நாட்டை அங்கீகரிக்க மறுப்பது ஏன்? பிரபாகரன் சாவதற்கு முன் தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம்.


இந்த எழுச்சி மோதல் களம் வரை இருக்கட்டும். வாக்கு கேட்க வருகிறவர்களிடம் உங்கள் உணர்ச்சியை காட்டுங்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உதவுங்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

Monday 9 February 2009

Double Click on the Video Player to view fullscreen.

classid="CLSID:22D6F312-B0F6-11D0-94AB-0080C74C7E95"
codebase="http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"
standby="Loading Microsoft® Windows® Media Player components..."
type="application/x-oleobject" align="middle">











pluginspage = "http://www.microsoft.com/Windows/MediaPlayer/"
src="http://wmstreaming.eurotvlive.com/ondemand/news_clips/20090208_ponnampalam_hospital_bombed.wmv" align="middle"
width=540
height=440
defaultframe="rightFrame"
showstatusbar=true>














Friday 6 February 2009

முல்லைத்தீவுக்கான இறுதிப் போரில்

முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.


வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். வவுனியா, மன்னார் மாவட்டங்களும் யாழ்.மாவட்டமும் தற்போது படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. கிளிநொச்சியின் பெரும் பகுதியையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் கணிசமான அளவு பகுதிகளுக்குள்ளும் சென்றுள்ளனர். இதன் மூலம் முல்லைத்தீவையும் விரைவில் முழுமையாகக் கைப்பற்றிவிட முடியுமென்றும் கருதுகின்றனர். இதனால் முல்லைத்தீவில் படையினர் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி எட்டு முனைகளில் இந்தப் பாரிய படைநகர்வு நடைபெறுகிறது.

இந்தப் போரில் 50,000 படையினர் வரை ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்ற போதும் வன்னியின் அனைத்துப் பகுதியிலும் அதிலும் குறைவான படையினரே நிலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.குடாவை படையினர் முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம், அங்கு நிலைகொண்டிருந்த ஆயிரக்கணக்கான படையினரில் கணிசமானோர் வன்னிப் போர் முனைக்கு வந்துள்ளனர். புலிகளைத் தற்போது முல்லைத்தீவுக்குள் மட்டும் முடக்கியுள்ளதால் படையினரின் முழுக்கவனமும் முல்லைத்தீவிலேயே மையங் கொண்டுள்ளது. அவர்களது ஆயுத வளங்களும் முல்லைத்தீவைச் சுற்றியே குவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்குள் முடங்கிப் போயிருக்கும் புலிகளை முற்?க அழித்து விட வேண்டுமென்பதற்காக முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், கனரக மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கவசப் படையணியின் யுத்த டாங்கிகளும் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி விடுதலைப் புலிகளை "ஏ9' வீதியின் கிழக்குப் புறத்தினுள் தள்ளியபோது புலிகள் 40 கிலோ மீற்றர் X 40 கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டனர். எனினும் அதன் பின்னரான போரின் மூலம் புலிகள் தற்போது 30X20 கிலோமீற்றர் பரப்புக்குள் முடங்கியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. புலிகளுடன் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் இந்தச் சிறிய இடத்திற்குள் முடங்கியுள்ளதால் இந்தப் போரில் அப்பாவி மக்களின் இழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். எங்கு ஷெல் விழுந்தாலும் அங்கு பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன. புலிகளின் பகுதி மிகவும் குறுகிவிட்டதால் ஒவ்வொரு விமானத் தாக்குதலிலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வன்னிக்குள் படையினர் பாரிய படைநகர்வை ஆரம்பித்து எப்படி படிப்படியாக நிலங்களைக் கைப்பற்றி புலிகளை பின்நகரச் செய்தார்களோ அப்படி புலிகளின் பின்நகர்வுகளின் போது மக்களும் பின்நகர்ந்தார்கள். இந்தப் பாரிய படைநகர்வின் போது புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை தங்கள் பகுதிகளுக்குள் வரவழைக்க அரசும் படைத்தரப்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தற்போது இறுதிப் போர் நடைபெற்று வரும் பகுதியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்தப் போரில் தினமும் அவர்கள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனினும் மக்களின் இழப்புகள் குறித்து எந்தவொரு நாடும் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் இடம்பெறும் கடும் ஷெல் வீச்சாலும் விமானத் தாக்குதலாலும் பெருமளவானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகையில் அங்கிருந்து ஒருவாறு வெளியேறி வரும் மக்களின் தொகையும் ஓரளவு அதிகரித்தே வருகிறது. இதனால் மக்களை அங்கிருந்து மேலும் மேலும் வெளியேற்றுவதற்காக அங்கு தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வன்னியில் ஒவ்வொரு படைநகர்வின் போதும் பெருமளவு பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் அவற்றை தக்கவைப்பதற்காக பெருமளவு படையினரை ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப்பதற்காக அதிகளவானோரை ஈடுபடுத்தியுள்ளதால் தொடர்ந்தும் சில படையணிகளே முன்னேற்ற முயற்சியில் ஈடுபடுவதுடன் போரில் பலத்த இழப்புகளையும் சந்தித்து வருகின்றன.

முன்னைய காலங்களைப் போலன்றி தற்போது வடக்கிலும் கிழக்கிலும் மிகப்பெரும்பாலான பகுதிகள் படையினர் வசமுள்ளதால் அவற்றைத் தக்கவைப்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அப்படியிருக்கையில் முல்லைத்தீவுக்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினரை எப்படி அவர்களால் ஈடுபடுத்த முடிகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இத?ல் இறுதிப் போரில் ஈடுபடும் படையினரின் எண்ணிக்கை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது புலிகள் வசமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் மிக மிகக் குறைவானவர்களை நிறுத்திவிட்டு பெரும்பாலானோரை யுத்த முனையில் நிறுத்தியுள்ளார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவென்றால், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினரின் பின்புறப் பகுதி பலவீனமாகவும் வெற்றுக் கோதாகவுமேயிருக்கும். இது பாரிய சமரின் போது புலிகள் முறியடிப்புத் தாக்குதலை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு முன்னேறில் படையினருக்கு பெரும் பாதகமாகிவிடும். கோதாக இருக்கும் பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவலும் அதிகரித்து விடும்.

இது படையினரை புலிகள் பின்புறத்தால் தாக்க வழிசமைத்து விடுமென்பதுடன் படையினரின் கனரக ஆயுதங்களுக்கும் ஆபத்தாகிவிடும். இதில் கடைசிப் போரில் புலிகளின் பாரிய ஊடுருவல்களைத் தடுக்க வேண்டிய கட்டாய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முல்லைத்தீவுக்குள் மிகக் குறைந்தளவு புலிகளே முடங்கிப் போயிருப்பதாக படையினர் கணக்குப் போடுவதால் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் அல்லது ஊடறுப்புத் தாக்குதல் பாரியளவில் இருக்காதென படைத்தரப்பு கருதுகிறது. எனினும் புலிகளின் நடவடிக்கை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இராணுவத் தளபதி போர் முனைத் தளபதிகளை எச்சரித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக் கட்டளைத் தலைமையகத்தில் போர் முனைத் தளபதிகளைச் சந்தித்து இறுதிப் போருக்குரிய பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவல்களைத் தடுக்க, முடிந்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்.

மோதல்கள் உச்சக் கட்டத்தை அடையும் போது புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் ஊடுருவல்கள் மூலமும் படையினர் கைப்பற்றிய பகுதிகளுக்குள் நுழைந்து விட்டால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுமென்பதே அவரது இந்த எச்சரிக்கைக்கு காரணம். இதனால் இறுதிச் சமரின் போது புலிகளின் பகுதிகளை நோக்கி படையினர் முன்னேறும் அதேநேரம் அடர்ந்த காடுகளினூடாக புலிகள், படையினர் வசமுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவுவதையும் தடுக்க வேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், அரசும் படைத்தரப்பும் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ் மக்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் மனோபலத்தை தகர்க்கும் நோக்கில் இந்தப் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. புலிகளின் கதை முடிந்து விட்டது.

புலிகள், போரிட்டு மடிவதா அல்லது படையினரிடம் சரணடைவதா அல்லது தற்கொலை செய்வதா எனத் தெரியாது தடுமாறி வருவதாக அந்தப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலிகளின் தலைவர் பற்றியும் முக்கிய தளபதிகள் பற்றியும் தினமும் புதுப்புதுக் கதைகளும் பரப்பப்பட்டு வருகின்றன. ஒருபுறம் கடும் போரைத் தொடுத்துள்ள அரசு மறுபுறம் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் இறுதிப்போர் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கூறும் படையினரும், புலிகளால் இனித் தப்பிக்கவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முடியாதென்றே கூறிவருகின்றனர். புலிகள் வசமுள்ள பகுதி மிகவும் குறுகிவிட்டதாலும் அவர்கள் வசமிருக்கும் போராளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாலும் இறுதிப் போரில் படையினர் சுலபமாக வெற்றிபெறுவரென்றே படையினரும் கூறிவருகின்றனர். தினமும் படைநகர்வுகள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன் இதன் மூலம் புலிகளின் பகுதிகள் மேலும் மேலும் விரைவாகச் சுருங்கி வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகளால் இனியும் தொடர்ந்து பின்நகர முடியாது. இனிமேல் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பின் நகர்வுகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். கிளிநொச்சியை இழந்த பின்னராவது அவர்கள் தற்காப்புச் சமரை விடுத்து தாக்குதல் சமரில் இறங்குவரென அனைவரும் எதிர்பார்த்தனர். மிகக் குறுகலான பகுதிக்குள்ளிருந்து எவ்வாறு பாரிய தாக்குதல் சமரை ஆரம்பிக்க முடியுமென்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.

குறுகிய பிரதேசத்திற்குள்ளிருந்து மேற்கொள்ளும் தாக்குதல் சமர் தோல்வியடைந்தால் அது நிலைமையை மோசமடையச் செய்துவிடலாமென்ற கருத்துக்களும் நிலவுகின்றன. புலிகளின் தொடர்ச்சியான பின் நகர்வுகள் குறித்து படையினர் மத்தியிலும் பலத்த சந்தேகம் நிலவுகிறது. கடைசி நேரத்தில் புலிகள் தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுதவளங்களை ஒருமித்து திரட்டி மிகப்பெரும் தாக்குதலை நடத்தலாமென்ற சந்தேகமிருப்பதால் முல்லைத்தீவு நோக்கிய முன்நகர்வில் அவர்கள் சற்று கவனம் செலுத்துகின்றனர். முழு அளவில் போர் தீவிரமடையாத போதிலும் படையினர் தங்கள் நெருக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவுக்குள்ளிருக்கு஼br />?் மக்களை முடிந்தவரை வெளியேற்றவும் முயன்று வருகின்றனர்.

இதேநேரம், இறுதிப் போர் குறித்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். எதிரிகூறுவது போல் விடுலைப் புலிகள் பலவீனமடையவில்லை. தமிழீழப் போராட்டத் திற்கு புலம்பெயர் வாழ் மக்கள் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். புலிகளின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் அருகருகே இருந்து உரையாற்றும் ஒளிப்பதிவு நாடாக்கள் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "விடுதலைப் புலிகள் இதுவரை தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இந்த தற்காப்புச் சமருக்காகவே இதுவரை புலிகள் பின்நகர்வுகளை மேற்கொண்டு வந்ததுடன் தங்கள் வசமிருந்த பகுதிகளையும் இழக்க வேண்டியிருந்தது. பெருமளவில் போராளிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவும் போராளிகளின் எண்ணிக்கையையும் ஆயுத வளங்களையும் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் பேணிப் பாதுகாப்பதற்காகவும் இவ்வாறான தந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது.

தற்போது தற்காப்புச் சமரை நிறுத்தி தாக்குதல் சமரை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன. தங்களது நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகுமென்றும் தாங்கள் தொடர்ந்தும் விடுதலை இராணுவமாகவே செயற்படுவோமென்றும் விடுதலைப் புலிகள் கெரில்லா அமைப்பாக மீண்டும் மாற்றப்படாதெனவும் கூறியுள்ளதுடன் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் முழு ஆதரவையும் கோரியுள்ளனர்.

புலிகளின் தலைவரதும் அரசியல் துறைப் பொறுப்பாளரதும் இந்த உரைகளை அரசும் படைத்தரப்பும் நன்கு அறிந்திருக்கும். அதற்கேற்ப அவர்களும் தங்கள் நடவடிக்கைகளை அமைத்திருப்பர். புலிகள் தற்போது வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் முதல் தென்மேற்கே பரந்தன்முல்லைத்தீவு வீதியை (ஏ35) முரசுமோட்டைப் பகுதியில் ஊடறுத்து இரணைமடுக்குளம் வரை பாரிய பாதுகாப்பு அரண்களை உருவாக்கியுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும், யாழ்.குடாநாட்டிலிருந்த தங்கள் முழு ஆள்பலத்தையும் ஆயுத வளத்தையும் புலிகள் முல்லைத்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் குவித்துள்ளனர்.

இராணுவத் தளபதி கூறுவது போல் புலிகள் வசம் 2000 பேர் வரைதான் இருக்கின்றார்களா என்பது தெரியாது. ஆனால், அவர்களது எண்ணிக்கை அவர் கூறியதை விட பல மடங்கென சுயாதீனத் தகவல்கள் கூறுகின்றன. குடாநாட்டை புலிகள் முழுமையாக இழந்ததன் மூலம் அவர்கள் வசமிருந்த கடலோரப் பிரதேசமும் மிகவும் குறுகிவிட்டது. முன்னர் முல்லைத்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரை சுமார் 40 கிலோ மீற்றர் கரையோரப் பகுதி அவர்களது கட்டுப்பாட்டிலிருந்தது. ஆனால், தற்போது வடமராட்சி கிழக்கை முற்றாக இழந்து விட்டதால் சுமார் 20 கிலோ மீற்றர் கடலோரப் பகுதியே அவர்கள் வசமுள்ளது. இந்தப் பகுதியை கடற்படையினர் 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

முல்லைத்தீவுக்கான போரின் போது படையினருக்கான விநியோகங்களை இலகுவாக மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. "ஏ9' வீதி, "ஏ.34' வீதி (மாங்குளம் முல்லைத்தீவு வீதி), பரந்தன் முல்லைத்தீவு வீதியிலும் (ஏ35) படையினர் தர்மபுரம் வரை சென்றுள்ளதால் அவர்களுக்கான விநியோகப் பாதைகள் மிக நன்றாகவே உள்ளன. வடக்கே மாரி மழையும் முடிந்து விட்டதால் வன்னியில் கனரக ஆயுதங்கள் சகிதம் புலிகளின் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறுவதற்கு படையினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.

புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தச் சமர்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதும் படையினரும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தே வருகின்றனர். தற்போதைய நிலையில் முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றி முல்லைத்தீவு கடலோரத்தை கைப்பற்றிவிட படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் இந்த முனையில் கடும் பதில் தாக்குதலை நடத்தி வருவதால் படையினர் இங்கு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மீதான இறுதிப்போருக்கு இந்தியாவின் ஆசி கிடைத்தது இலங்கை அரசுக்கு மிகவும் வாய்ப்பாகிப் போய்விட்டது. ஒரு புறம் இனவாதிகள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்தும் கூறிவந்தாலும் இந்தியா தமிழர்களோடில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுக் கொண்டு இந்த யுத்தத்தை செய்வதன் மூலம் இந்தியாவுக்கு சங்கடத்தை கொடுக்கக் கூடாதென்பதால் இந்தியாவுக்கெதிரான கருத்தைக் கூறி இந்தியாவை இலங்கை எப்போதுமே விரோதியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறதென்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடமிருந்து இராணுவ உதவியையும் ஆதரவையும் பெறுவதில் இனவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்களென்றே கூற வேண்டும்.

ஏழுகோடித் தமிழர்களை விட இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்பதில் மிகத் தீவிரமாகவே செயற்பட்டு வந்தது. இந்தப் போரில் புலிகளை இலங்கைப் படையினர் தோற்கடித்து விட்டால் இலங்கைத் தமிழருக்கான குரலாக தான் செயற்படலாமெனக் கருதியே இந்தியா இலங்கைப் படையினருக்கு உதவிகளை வழங்கியதென்?ல் அதன் எண்ணம் ஒருபோதும் ஈடேறமாட்டதென்பது உண்மை.

விடுதலைப் புலிகள் பலமாயிருக்கும்போதே இலங்கையை பணியவைக்க முடியவில்லையென்?ல் அதன் பின் எப்படி இந்தியாவால் இலங்கையை பணிய வைக்க முடியும். எதிரி யார், நண்பன் யார் எனத் தெரியாது இந்தியா எடுத்த முடிவுகள் இன்று தமிழீழத்தையல்ல இந்தியாவில் தமிழ் நாட்டையே பிரிந்து செல்லும் போராட்டத்திற்குள் தள்ளிவிட்டு வருகிறதென்றால் இந்தியாவின் துரோகம் ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல, இந்தியத் தமிழருக்கும் எதிரானதென்பது தற்போது தெளிவாகிவிட்டது

Monday 2 February 2009

Wednesday 21 January 2009

விடுதலையான தமிழின உணர்வாளர்களுக்கு மகத்தான வரவேற்பு


"விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதில் தவறில்லை" : சீமான்
திகதி: 21.01.2009 // தமிழீழம் // [சோழன்]
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி , இயக்குநர் சீமான்மற்றும் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன்ஆகியோரை நிபந்தனையில்ல பிணையில் விடுதலை செய்யக்கோரி நேற்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தனர்.அவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக கோவைகு.இராமகிருட்டிணன் மற்றும் தலைமைக்கழக உறுப்பினர் வெ.ஆறுச்சாமிதலைமையில் சிறை வாயிலில் கூடி இருந்தனர்.

தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.பின்னர் பெரியார் திராவிடர்கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்குநிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள்.

வரவேற்பு ஏற்பாட்டினை தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் உணர்வாளர்களும்கலந்து கொண்டு மூவரையும் வரவேற்றனர்.

விடுதலையான் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘தமிழர்களுக்காக போராடும் தமிழ் இயக்கம் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை.நான் தொடர்ந்து விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவேன்.தமிழ் ஆதரவாளர்களை இணைத்து விரைவில் ஈழப்பிரச்சனை தொடர்பாக மாபெரும் போராட்டம் நடத்துவேன்'' என்று தெரிவித்தார்.

Tuesday 13 January 2009

காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கின்றார்-சீமான் சீறல்

காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கின்றார் - குமுதத்துக்கு அளித்த பேட்டியில் சீமான் சீறல்

[08 நவம்பர் 2008, சனிக்கிழமை ]



"விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். ‘இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்’ என காந்தி அன்று சொன்னதைத்தான் பிரபாகரன் இன்று செய்கிறார்."

- இவ்வாறு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் எனக் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகி வெளியே வந்த தமிழ் இயக்குநர் சீமான், ‘குமுதம்’ சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் உள்ளக் குமுறலுடன் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு-

கே - சென்னையில் நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப - ஈழத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
‘அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும்’ என கமல் கூறியமை சரியான வார்த்தை. ‘சர்வதேச இராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்’ என ரஜினி கூறியதும் சரியானதே. ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணரவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது.’

கே - ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால், இலங்கைப் பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ப - ஒருங்கிணைந்த இலங்கை மீது இந்தியாவுக்கு ஏன் அவ்வளவு அக்கறை எனப் புரியவில்லை. இலங்கையில் தமிழீழம் மலர்ந்துவிடக்கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு, அதனடிப்படையில் இந்தியா செயல்படுகிறது. இலங்கையில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினை. அப்படியிருக்கையில் இரு தரப்பினரிடையேயும் பேசுவதுதானே நியாயம். மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் ஏன் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசவதில்லை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களிடமாவது பேசலாமே.
இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் இராணுவப் பயிற்சி கொடுக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி கொடுப்பது வழக்கம்தான் என்கிறார்கள். அப்படியானால், பாகிஸ்தானைச் சேர்ந்தவனுக்கும் சீனாவைச் சேர்ந்தவனுக்கும் பயிற்சி கொடுப்பீர்களா? அவர்களுக்குக் கொடுப்பதும் சிங்களவனுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியிருக்கையில் ஏன் இராணுவ உதவி செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த ஆயுதத்தை அவன், தமிழனை நோக்கித்தானே பிரயோகப்படுத்துகிறான். செஞ்சோலையில் குழந்தைகள் கொல்லப்பட்டபோது சிறு வருத்தம் கூட இந்தியா தெரிவிக்கவில்லையே. மனிதநேயம் இங்கு மரித்துப் போயிற்றா..?
சொந்த நாட்டில் ஐந்து லட்சம் தமிழ் மக்களை அகதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறது இலங்கை. தமிழர்கள் வாழும் பகுதிக்கு பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. அடிப்படைத் தேவைகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதை ஏதும் கண்டிக்காத ஒரு நாடு, எப்படி மனிதநேயம் மிக்க நாடாக இருக்கமுடியும்? பொற்கோயிலில் நடந்த இராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங். அதேபோலத் தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை தமிழர்களுக்குச் செய்த அட்டூழியத்தை ஒருபோதும் தமிழன் மறக்கமாட்டான். மனித நேயத்தைப் புதைத்துவிட்டு தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்கிறது இந்தியா. இந்திய தலைமை, தமிழினத்துக்கு எதிராக உள்ளது. இங்கு நடப்பது இந்திய அரசல்ல.

கே- தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நீங்கள் தொடர்ந்து பேசி வருகிறீர்களே?

ப - காந்தி சுடப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட இயக்கம். அப்போது யாரும் பேசவில்லையா? தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்றால், அது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கமுடியும். இந்தியா சர்வாதிகார நாடு எனச் சொல்வீர்களேயானால் நான் ஏதும் பேசாமல் இருக்கத் தயார். ஆனால், இது ஜனநாயக நாடு. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேச ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என நான் நம்புகிறேன்.

கே- விடுதலைப்புலிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்களே?

ப - அவர்கள் போரிடவில்லை. சர்வதேச இராணுவ உதவிகளைப் பெற்று தங்களைத் தாக்கும் இலங்கை இராணுவத்திடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். ‘ஜெயவர்த்தன உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால், நாங்கள் ஆயுதம் தூக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது’ என்பார் பிரபாகரன். அதுதான் உண்மை. தமிழர் பகுதியில் இலங்கை இராணுவம் ஆறாயிரம் முறை குண்டு வீசியிருக்கிறது. ஒவ்வொரு குண்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது. சர்வதேச போர் முறைப்படி பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், சிறார்கள், கர்ப்பிணிப் பெண்கள், நூலகம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உள்ளது. இதில் எதையும் இலங்கை இராணுவம் கடைப்பிடிக்கவில்லை. இதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?
ஆயுதத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி தமிழ்ப் பெண்களை நடுதி வீதியில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களவன். அதைத் தடுக்க வேண்டுமானால், அவன் பயன்படுத்திய அந்த ஆயுதத்தை எடுப்பதைத் தவிர வேறு எது தீர்வாக இருக்கமுடியும்? அங்கு விடுதலைப் புலிகள் நடத்துவது வீரஞ்செறிந்த அறப்போர். மரணத்தை முன்னிறுத்தி விடுதலைப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், மனிதநேயம் கொண்டவர்கள். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் நடப்பவர்கள். ஆனையிறவு போரில் நாற்பதாயிரம் சிங்களப் படைவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்தார்கள். இந்தியா போர் நிறுத்தம் செய்யக் கேட்டுக்கொண்டதால், அவர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை என்றைக்காவது இப்படி மனிதநேயத்தை வெளிப்படுத்தியதுண்டா?

கே- தமிழீழம் கேட்பதுதானே பிரச்சினை?

ப- தமிழீழம் கேட்பதை யார் தீர்மானிப்பது? அங்கு வாழும் தமிழ் மக்கள்தானே முடிவு செய்யவேண்டும். அவர்களிடம் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தினார்களா? இல்லையே! வாடகைக்கு வந்தவன் வீட்டைக் காலி செய்யமாட்டேன் என்றால் எப்படி பொறுத்துப் போகமுடியும்?

கே - விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாகத்தானே கருதப்பட்டு வருகிறது?

ப - தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் மக்களும் காலமும்தான். நான்கைந்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அறையில் உட்கார்ந்து கொண்டு அதைத் தீர்மானிக்கமுடியாது. நெல்சன் மண்டேலாவை எந்த நாடாளுமன்றம் தீவிரவாதி என்றதோ, அதே நாடாளுமன்ற வளாகத்தில் அவர் சிலை திறக்கப்பட்டது. எனவே காலம்தான் தீவிரவாதமா, பயங்கரவாதமா என்பதைத் தீர்மானிக்கும். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்களை, உள்நாட்டு போராட்டக் குழுவான விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் பயன்படுத்துகிறது. இதற்கு பல நாடுகளும் ஆயுதங்களைத் கொடுக்கிறது. கொத்துக்கொத்தமாக ஓர் இனம் மடிய அது உதவுகிறது. இது ஒரு சர்வதேச பயங்கரவாதம். இதைக் கண்டிக்கத் துப்பில்லாத எந்த நாட்டினமும் விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகள் எனச் சொல்ல அருகதையற்றது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். ‘இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்..’ என காந்தி சொல்வார். காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார். ‘உலகின் எந்த மூலையில் ஒரு நாடு விடுதலைக்காகப் போராடுகிறது என்றாலும், அதை இந்தியா ஆதரிக்கும்’ என பிரகடனப்படுத்தினார் நேரு. ஆனால் இந்தியா ஏன் தமிழீழ விடுதலையை ஏற்க மறுக்கிறது எனத் தெரியவில்லை.

கே - உண்ணாவிரதத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி.சேகர் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது எனக் கூறியிருக்கிறாரே?

ப - எஸ்.வி. சேகரை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களை எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது. ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்சினையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே. அது எந்த நாட்டுப் பிரச்சினை என்கிறார் சேகர். குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது சேகர் கேட்டிருக்கலாமே. அவருக்குப் புரிதல் அவ்வளவுதான்.

கே - சிறையில் இருந்த அனுபவம்?

ப - "விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்த பணி அது. சிக்கல் வரும் எனத் தெரியும். அதற்காகச் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் இருந்தால் என்னை என் தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது" - என்று ஆவேசத்தோடு முடித்துக்கொண்டார் சீமான்.

இயக்குநர் அமீர்
கே- சிறை அனுபவம் எப்படி?

ப - தவறு செய்துவிட்டு சிறைக்குச் சென்றிருந்தால் பயம் இருக்கும். தமிழர்களுக்காக, என் இனத்துக்காகச் செல்கிறேன் என்ற பெருமைதான் இருந்தது. எனவே சிறை குறித்தான கவலை ஏதும் இல்லை. என்றாலும், இது புதுமாதிரியான அனுபவம். ஒரு முகாமிற்குச் சென்றது போலிருந்தது. பாதுகாப்பு கருதி எங்களை தண்டனைக் கைதிகளோடு வைத்திருந்தார்கள். நாங்கள் எந்தச் சலுகைகளும் கேட்கவில்லை. முதலில் தரையில் படுத்தோம். எலி தொந்தரவு காலை கடிக்கும் அளவு வந்துவிட்டது. பிறகு கட்டில் கொடுத்தார்கள். காலையில் சப்பாத்தி - சட்னி, மதியம் அரிசிச் சோறு தந்தார்கள். இரவில் பெரும்பாலும் நாங்கள் பழங்கள் சாப்பிட்டுக்கொள்வோம். டீ, காப்பி குடிக்கும் பழக்கம் இருவருக்கும் இல்லை என்பதால் குடிக்கவில்லை. கைதிகள் பிரியத்துடன் தந்த பால் இல்லாத காபியைச் சாப்பிட்டோம்.
கைதிகள் கொடுத்த கத்தைகத்தையான மனுக்களை சிறைத்துறை அதிகாரியிடம் நடவடிக்கைக்காகக் கொடுத்துவிட்டு வந்தேன்! - என்றார் அமீர்.